Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லடாக் பாங்காங் ஸோ ஏரியில் தாக்குதலுக்கு தயராகும் இந்தியா??

Advertiesment
லடாக் பாங்காங் ஸோ ஏரியில் தாக்குதலுக்கு தயராகும் இந்தியா??
, வெள்ளி, 3 ஜூலை 2020 (12:07 IST)
பாங்காங் ஸோ ஏரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள். எனினும் சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் டிஸோ ஏரி கடல்மட்டத்தில் இருந்து 13,900 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பாங்காங் டிஸோ ஏரிப்பகுதியில், இந்திய - சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து ஃபிங்கர் 4 முதல் பிங்கர் 8 வரையிலான 8 கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்து கொண்டது. உயரமான பகுதிகளை கைப்பற்றிய சீனா அப்பகுதியில் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து வலுவூட்டும் நடவடிக்கையில் ஈடுப்பட்டது.  
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாங்காங் ஸோ ஏரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலர்களின் அத்துமீறலுக்கு எதிரான போர் இது! – கமல்ஹாசன் அறிவிப்பு!