Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயின் இறப்பிலும் கடமை தவறாத மோடி! ஆறுதல் கூறிய மம்தா பானர்ஜி!

Advertiesment
Pm Modi Sad
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:10 IST)
இன்று பிரதமர் மோடியின் தாய் இறுதி சடங்குகள் நடந்த நிலையில் அதில் கலந்து கொண்டு சில மணி நேரங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இன்று குஜராத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். இன்று பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்க்காக மேற்கு வங்கம் செல்வதாகவே திட்டம் இருந்தது.

எனினும் தனது தாயாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த அவர் பிரதமராக தனது கடமையை தொடர்ந்தார். நேரில் செல்லாவிட்டாலும் காணொலி மூலமாக மேற்கு வங்க நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரிடம் அவரது தாயாரின் இரங்கலுக்கு ஆறுதல் கூறியபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கலங்கிய சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் செல்லும் முக ஸ்டாலின், ஈபிஎஸ்: பிரதமருக்கு ஆறுதல் கூற செல்வதாக தகவல்!