Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு ஜிகாத் - ராமராஜ்யம்.. எதுவேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்: பிரதமர் மோடி

Advertiesment
Modi

Siva

, செவ்வாய், 7 மே 2024 (14:15 IST)
இந்தியாவுக்கு தேவை வாக்கு ஜிகாத் அல்லது ராம ராஜ்ஜியம் இதில் இரண்டில் எது வேண்டும் என்பதை மக்களை முடிவு செய்யட்டும் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசி உள்ளார். 
 
இந்தியாவில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்து இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் முடிவடைந்த உடன் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன என்பதும் அன்றைய தினம் இரவே ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதை தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட அகில இந்திய தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவுக்கு தேவை வாக்கு ஜிகாத் அல்லது ராமராஜ்யம் எது வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இண்டி கூட்டணி கட்சிகள் தங்களுடைய வாரிசுகளை காப்பாற்றவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்றும் அவர்களுக்கு மக்கள் நலன் பற்றிய அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் 
 
மக்களின் சுக துக்கங்கள் பற்றி இண்டி கூட்டணிக்கு கவலை இல்லை என்றும் இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராமராஜ்யமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த தேர்தல் பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!