ஆந்திராவில் மே 13ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக வாகன பரிசோதனை செய்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தகுந்த ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் வாகன சோதனை செய்யும் போது 2000 கோடியுடன் சென்ற நான்கு கண்டெய்னர்கள் பிடிபட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கஜரம்பள்ளி என்ற பகுதியில் 2000 கோடி பணத்துடன் சென்ற நான்கு கண்டெய்னர்களை பறக்கும் அதிகாரிகள் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. வாகன தணிக்கையின் போது இந்த பணம் சிக்கியதாக தேர்தல் பறக்கும் பாடியனர் விசாரணை செய்தபோது கேரளாவில் இருந்து ஹைதராபாத்துக்கு ரிசர்வ் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகுந்த ஆவணங்களுடன் விளக்கப்பட்டதை அடுத்து அந்த நான்கு கண்டெய்னர்கள் பாதுகாப்பதன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே நானும் கண்டெய்னர்களின் சென்ற பணம் ரிசர்வ் வங்கி அனுமதி உடன் எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்றவுடன் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வாகனங்களை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.