இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த நிலையில் மார்ச் 24 முதல் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் முதல் நான்கு ஊரடங்கு உத்தரவுக்கும் இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவுக்கும் பல்வேறு தளர்வுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால், இன்னும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதேநேரம் இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது
இன்னும் சில நிமிடங்களில் மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது