Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலைகள் உடைப்பு விவகாரம்: தலையிட்டார் பிரதமர் மோடி

Advertiesment
சிலைகள் உடைப்பு விவகாரம்: தலையிட்டார் பிரதமர் மோடி
, புதன், 7 மார்ச் 2018 (09:51 IST)
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பதிவை அடுத்து தமிழகத்தில் பெரியார் சிலை ஒருசில இடங்களில் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதால் தமிழகம் முழுவதும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி சற்றுமுன்னர் உள்துறை அமைச்சகத்திடம் பேசியுள்ளார். மேலும் திரிபுரா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்து உடனடியாக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து சிலை உடைப்புகளை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து மாநில அரசுகளுக்கு உரிய தகுந்த அறிவுறுத்தலை வழங்குமாறு அவர் உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமிழகம், திரிபுரா இரு மாநிலங்களிலும் இனிமேல் எந்த சிலைகளுக்கும் சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் சிலை பதிவை நான் போடவே இல்லை: எச்.ராஜா மறுப்பு