Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஸ்டாகிராம் காதலால் அழிந்த ப்ளஸ்-1 மாணவி வாழ்க்கை! 18 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்!

girl abuse

Prasanth Karthick

, செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:42 IST)
கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வயப்பட்ட ப்ளஸ் ஒன் படிக்கும் சிறுமியை 18 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினோறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனக்கென தனி ஸ்மார்ட்போன் வைத்திருந்த மாணவி இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்த நிலையில் அதில் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற பின்னர் இருவரும் போனிலேயே வீடியோ கால் பேசிக் கொள்வது, நிர்வாண புகைப்படங்களை அனுப்பிக் கொள்வது என இருந்துள்ளனர்.

பின்னர் அந்த வாலிபர் மாணவியை தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே அவரது நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமியை, அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


மேலும் சிறுமியின் ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். நாளடைவில் அந்த வாலிபரின் நண்பர்களும் மாணவியின் நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நாளுக்கு நாள் இவர்களது தொல்லை அதிகரித்து வந்த நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்.

மிகவும் விரக்தியடைந்த நிலையில் அவர் காணப்பட்டதால் அவரை அவரது பெற்றோர்கள், குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி தனக்கு நடந்தவற்றை சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து பத்தனம்திட்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் மாணவியுடன் படித்த சில மாணவர்களையும் சேர்த்து மொத்தமாக 18 பேர் சிறுமியை சீரழித்தது தெரிய வந்துள்ளது. அந்த 18 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல் சிறுமியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் அதிவிரைவு தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி.. ராஜ்நாத் சிங் வாழ்த்து..!