Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க திட்டம்: உத்தரகாண்ட் அரசு அதிரடி

Advertiesment
Uttarakhand State Assembly
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (12:10 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் திரிவேந்தர சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருகிறது. இந்த நிலையில் அம்மாநில சட்டசபையில் பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிர் கட்சிகள் மற்றும் அரசு அமைப்புகள் ஆதரவு அளித்ததால் தீர்மானம் நேற்று அனைவரது முன்னிலையிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
இது குறித்து உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் கூறுகையில், ‘உலகிலுள்ள விலங்குகளிலேயே ஆக்ஸிஜனை சுவாசித்து அதே வாயுவை வெளியிடுவது பசுமட்டும் தான்.பிறக்கின்ற குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்ததாக அளிக்கப்படும் பசும் பால்  ஆரோக்கியமானது மற்றும் பசுவின் கோமியம் என்று அழைக்கப்படுகிற சிறுநீர் பலமருத்துவ குணங்களை கொண்டது என்று அறிவியல் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இத்தனை சிறப்புகளைக் கொண்ட பசு நம் தாய்மையின் அடையாள சின்னமாகவும் மதிக்கப்படுகிறது.இத்தகைய காரணங்களால் பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்த தீர்மானம் மத்திய அரசிற்கு அனுப்பப்படும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் மீது பாய்ந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் வழக்கு