கேரள முதல்வராக இன்று பதவியேற்கிறார் பினராய் விஜயன்
கேரள முதல்வராக இன்று பதவியேற்கிறார் பினராய் விஜயன்
கேரள முதல்வராக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராய் விஜயன் இன்று பதவியேற்கிறார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 91 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து, முதல்வர் பதவிக்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும், பினராய் விஜயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் கட்சியின் மாநில குழு பினராய் விஜயனை தேர்வு செய்தது. இதனையடுத்து, பினராய் விஜயன் மற்றும் அவரது தலைமையில் 19 அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.