திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி
திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி வலியறுத்தியுள்ளார்.
பாமக வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில துணைப் பொதுச் செயலர்கள் சென்னையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தான் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு பின்பே, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றபு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது எதிர்பார்த்த சம்பவம் தான் என்றார்.