Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை !

Advertiesment
கர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை !
, புதன், 17 ஜூலை 2019 (15:13 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்கோபர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜ்குமார். இவரது மகள் மீனாட்சி (20)  என்பவர் அதேபகுதியைச் சேர்ந்த பிரிஜேஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரின் காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரிந்தபோது, வகுப்பு வேறுபாடு காரணமாக கடுமையாக எதிர்த்தார். 
 
இதனால் காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டு வேறொரு ஊரிற்கு சென்று தனியாக வசித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் தன் பெற்றோர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று மீனாட்சி திரும்ப தன் பெற்றோ வீட்டுக்கு முடிவெடுத்துள்ளார்.  இதுகுறித்து தகவக் அறிந்த ராஜ்குமார்,தன் மகள் வீட்டுக்கு வந்தால் அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதி,  தன் மகளை மற்றோரு இடத்திற்கு அழைத்துள்ளார்.
 
அங்கு வந்த மகள் மீனாட்சியை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றார் ராஜ்குமார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீனாட்சியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராகுமாரை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அதில் தான் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட ஆசிரியர்!!