பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது அடுத்து நாளை முதல் பெட்ரோல் விலை 100 க்கும் குறைவாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் 116 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பெட்ரோலுக்கான கலால் வரி ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசலுக்கான கலால் வரியை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டுமே 100 ரூபாய்க்கும் குறைவாக நாளை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது