Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிபந்தனையற்ற பொது மன்னிப்பு: பெரிய சைஸ் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

Advertiesment
pathanjali

Mahendran

, புதன், 24 ஏப்ரல் 2024 (11:00 IST)
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதஞ்சலி நிறுவனம் ஊடகத்தில் பெரிய சைஸ் விளம்பரம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து செய்தித்தாள்களில் பெரிய சைஸ் விளம்பரத்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழிகாட்டுதல்படி, ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும்  பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதில், “நிபந்தனையற்ற பொது மன்னிப்பு” என்ற வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அந்த விளம்பரத்தில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம், இதுபோன்ற தவறு இனி மீண்டும் நடைபெறாது என்பதை  உறுதியளிக்கிறோம். 
 
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை உரிய கவனத்துடனும், நேர்மையுடனும் கடைப்பிடிப்போம் என உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்பி எடுக்க ஆசைப்பட்டு எரிமலைக்குள் விழுந்த பெண்! – இந்தோனேஷியாவில் சோகம்!