Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரை கொலை செய்தவரை அடித்தே கொன்ற ஊர்ப்பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (19:06 IST)
ஆசிரியரை சுட்டுக்கொலை செய்த கொலைகாரனை பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குஷிநகர் என்ற பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்று இருந்தார். அப்போது அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் ஒன்றில் அவர் தனது நண்பரின் வருகைக்காக காத்திருந்த போது திடீரென அந்த டீக்கடையில் இருந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஆசிரியரை நோக்கி சுட்டுள்ளர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் துப்பாக்கியால் சுட்ட கொலைகாரனை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கொலைகாரன் துப்பாக்கியை காட்டி பொது மக்களை மிரட்டியதாக தெரிகிறது. இருப்பினும் பொதுமக்கள் அச்சப்படாமல் அந்த கொலைகாரனை பிடித்துள்ளதாக தெரிகிறது
 
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவதற்கு முன்பே ஊர் மக்களே அந்த கொலைகாரனை கம்பு, கட்டையால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஆசிரியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொலைகாரனை பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments