சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் குறித்த புதிய தகவல்

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:25 IST)
சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் குறித்த புதிய தகவல்
சென்னையில் இருந்து செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. குறிப்பாக விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன. பயணிகள் மத்தியில் ரயில் பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தற்போது சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பொது மக்களும் சென்னையிலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பொது மக்களும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments