பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக பலர் புகார் அளித்து வந்த நிலையில் அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் மத்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை ஒட்டுக்கேட்டதாக வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த உளவு விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள 500க்கும் அதிகமான புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த வாரத்தில் உச்சநீதிமன்றம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.