Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.3,300 கோடியை உடனே திருப்பிச் செலுத்துங்கள்..! அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

anil ambani

Senthil Velan

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (17:09 IST)
டெல்லி மெட்ரோவிடம் இருந்து பெற்ற ரூ.3,300 கோடியை உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்’ என அனில் அம்பானி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அனில் அம்பானி கடந்த 2008ஆம் ஆண்டு உலகின் ஆறாவது பணக்காரர் என அறியப்பட்டார். ஆனால் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், அவருடைய வணிக நிறுவனங்கள் பின்னடவைச் சந்தித்ததால் பில்லியனர் பட்டியலில் இருந்தும் வெளியேறினார். தொடர்ந்து நஷ்டத்தைச் அவர் சந்தித்து வருகிறார்.
 
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் துணை நிறுவனமான DAMEPL, கடந்த 2008ஆம் ஆண்டு, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருந்தது. மெட்ரோ கட்டுமானப் பணிகள் ரூ.8,000 கோடியை மெட்ரோ நிறுவனம் வழங்க வேண்டும்” என DAMEPL நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
 
இந்த வழக்கில், DAMEPL நிறுவனத்திற்கு டெல்லி மெட்ரோ ரூ.8,000 கோடி வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில், டெல்லி மெட்ரோ நிறுவனமும் கிட்டத்தட்ட 3,300 கோடி ரூபாய் வரை DAMEPL நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. அதேநேரத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து மெட்ரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது அனில் அம்பானிக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அத்துடன், டெல்லி மெட்ரோவிடம் இருந்து பெற்ற ரூ.3,300 கோடியையும் உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு..! விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!