தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது.
இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டது மற்றும் காவலில் வைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிடெல்லி ஹை கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். தான் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கவே கைது நடவடிக்கை என்றும் அவர் குற்றம் காட்டி இருந்தார்
ஆனால் இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு பட்டியில் இடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது