Publish Date: Wed, 29 Sep 2021 (18:01 IST)
Updated Date: Wed, 29 Sep 2021 (18:35 IST)
சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ஏராளமான தளர்வுகளை அளித்துள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 19 மாதங்களாக சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இல்லை. இதனால் சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.