Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போச்சு எல்லாம் போச்சு... ஸ்டேட்டஸ் போட்டு சுப்ரியா வருத்தம்

போச்சு எல்லாம் போச்சு... ஸ்டேட்டஸ் போட்டு சுப்ரியா வருத்தம்
, சனி, 23 நவம்பர் 2019 (12:09 IST)
கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது என சரத்பவார் மகள் சுப்ரியா வருத்தம். 
 
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
 
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார்.  இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய அரசு மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் கவனம் செலுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல பிரமர் மோடியும் முதல்வராக பதவியெற்றுள்ள தேவேந்திர ஃபட்நாவிஸ், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 
ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கட்சியோடு சேர்ந்து குடும்பமும் உடைந்துவிட்டது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மகளும் முன்னாள் எம்பியுமான சுப்ரியா வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்பவாரின் முதுகில் குத்திய அமித்ஷா: கே.எஸ்.அழகிரி ஆதங்கம்!