நாடாளுமன்றத்தில் அமளி... இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:46 IST)
நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருவதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது என்பதும் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பென்ட் ரத்து செய்யப்படும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருவதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments