வேளாண் சட்ட ரத்து மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திரமோடி கடந்த 19ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முதலாவதாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு முறையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் குறைந்தபட்ச விலை நிர்ணயம் குறித்து அமலியில் ஈடுபட்டதால் அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.