Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக SC/ST பிரிவினரை நியமிக்காதது ஏன்? நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

new parliament  India

Siva

, புதன், 7 பிப்ரவரி 2024 (08:43 IST)
உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக SC/ST பிரிவினரை நியமிக்காதது ஏன்? என நாடாளுமன்றக் குழு சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்து கூறியபோது, ‘இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, IIM, IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு "தகுதியற்றவர்கள்" என எந்த காரணமும் இன்றி வேண்டுமென்றே அறிவிக்கப்படுகிறார்கள். இது தேர்வுக் குழுக்களின் பாரபட்சம், சார்பு நிலையை வெளிக்காட்டுகிறது.

போதுமான எண்ணிக்கையில் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற அரசாங்கத்தின் "பொதுவான" பதிலை ஏற்க விரும்பவில்லை" என மக்களவையில் SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எவரும் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என  SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு குரல் கொடுத்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து!