நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனை அடுத்து மறுநாள் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக கொண்டு செல்ல அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அனைத்து கட்சிகளும் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்படும் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எழுப்ப திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது