Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்தில் இருந்து மேற்குவங்க சிறுமியை பார்க்க வந்த இளைஞர்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 27 ஜூன் 2025 (10:47 IST)
சமூக வலைத்தளம் மூலம் பழக்கமான மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க வந்த டச்சு நாட்டவர் ஒருவருக்கு கசப்பான அனுபவம் நேர்ந்துள்ளது. அவர் அந்த பெண்ணை சந்திக்க அனுமதிக்கப்படாததுடன், சந்தேகத்திற்குரிய செயல்பாடு என்று கூறி உள்ளூர்வாசிகள் புகார் அளித்ததால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பகுதியை சேர்ந்த ஹென்ரிக்ஸ் என்பவர் சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்ணை சந்தித்தார். அவர் ஒரு மைனர்  என்பதை அறியவில்லை. அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக வளர்ந்ததால், ஹென்ரிக்ஸ் அந்த பெண்ணை நேரில் சந்திக்க முடிவு செய்தார். 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்ஸ்டர்டாமில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். 37 வயதான அவர், ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானம் பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கி, சாலை மார்க்கமாக பயணித்து அந்த பெண்ணின் ஊருக்குச் என்றார். ஆனால் அவர் எவ்வளவு முயற்சி செய்தும், அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. .
 
அந்தப் பெண்ணின் முகவரி தெரியாததால், அவர் சுற்றுப்புறத்தில் அலைந்து திரிந்தார். ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் பல மணி நேரம் அந்த பெண்ணுக்காக காத்திருந்தார்.  ஐந்து முதல் ஆறு மணி நேரம் அதே பகுதியில் ஒரு வெளிநாட்டவர் சந்தேகத்திற்குரிய முறையில் சுற்றித் திரிவதை பார்த்த பிறகு, உள்ளூர்வாசிகள் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
 
காவல்துறையினர் விசாரணைசெய்தபோது  ஹென்ரிக்ஸ் தனது விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அடையாள சான்றுகளையும் சமர்ப்பித்தார். மேலும் அவர் தனது வருகையின் நோக்கத்தையும் விளக்கினார், அந்த பள்ளி மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தை காவல்துறைக்குக் காட்டினார்.
 
ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளை சந்திக்க அனுமதிக்க விரும்பவில்லை, மேலும் அந்தப் பெண் ஒரு மைனர் என்பதால் எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை. எனவே, சரிபார்ப்பு செயல்முறையை முடித்த பிறகு, நாங்கள் அவரை மரியாதையுடன் செல்ல அனுமதித்தோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
 
நட்பு முறையில் அந்த பெண்ணை காண வந்ததாகவும், ஆனால் ஏமாற்றம் அடைந்ததாகவும் ஹென்ரிக்ஸ் வருத்தத்துடன் கூறி இந்தியாவில் இருந்து வெளியேறினார்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments