இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் அதிகபட்சமாக நான்கு நாட்கள் தான் தாக்கு பிடிக்கும் என்றும் நான்கே நாட்களில் இந்தியாவிடம் சரணடையும் நிலை ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குவோம், இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று வீராவேசமாக பாகிஸ்தான் தலைவர்கள் பேசி வந்தாலும், உண்மை நிலை அப்படி இல்லை என்றும் பாகிஸ்தானில் உள்ள அணுகுண்டுகள் எல்லாம் மிகவும் பழையது என்றும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி, பாகிஸ்தான் தன்னுடைய கையிருப்பில் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்து விட்டது என்றும், தற்போது அந்நாட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த விதமான நவீன ஆயுதங்களும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு என்பதால், அதிகபட்சமாக நான்கு நாட்கள் மட்டுமே பாகிஸ்தானால் தாக்குபிடிக்க முடியும் என்றும், போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே, பாகிஸ்தான் போரை தவிர்க்க தீவிரவாதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.