குஜராத் கடல் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா எச்சரிக்கையை மீறி அட்டகாசம்!

Prasanth K
ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (12:38 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக போர் மூண்ட நிலையில் பின்னர் இரு நாடுகள் பேசி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தன. மேலும் இந்திய எல்லையருகே பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என இந்தியா எச்சரித்திருந்தது.

 

இந்நிலையில் குஜராத் கடல் எல்லை அருகே அத்துமீறியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். இந்தியா - பாகிஸ்தான் எல்லையான சர் க்ரீக் பகுதிக்கு பாகிஸ்தான் கடற்படைத் தளபதி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் இங்கிலாந்திடம் 3 ஹோவர்க்ராஃப்ட் கப்பல்களை வாங்கியது.

 

இந்த கப்பல்களை பாகிஸ்தான் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியை குஜராத் அருகே சர் க்ரீக் எல்லையில் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே குஜராத் அருகே ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தானின் செயல்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றமின்றி விற்பனையாகி வரும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

இன்றே புயலாக வலுவடையும் மோன்தா! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வரிவிதிப்பால் அதிருப்தியில் ஆசிய நாடுகள்! சமாதானம் செய்ய வரும் ட்ரம்ப்!

வங்கக்கடலில் வலம் வரும் மோந்தா புயல்! நாகை - இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்!

தீவிர புயலாக வலுவடையும் மோந்தா! எந்தெந்த மாவட்டங்களை வெளுத்து வாங்கப்போகுது மழை?

அடுத்த கட்டுரையில்
Show comments