Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் ஒருவர் காயம்!

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (09:41 IST)
ஒருபக்கம் அபிநந்தனை விடுதலை செய்வதோடு, சண்டை வேண்டாம், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து கொள்வோம் என்று கூறி வரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் காஷ்மீர் உள்பட இந்தியாவின் சில பகுதிகளில் அத்துமீறி தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது
 
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி என்ற பகுதியில் 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் இந்த ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை வேண்டாம், சமாதானம் மட்டுமே தேவை என சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதல் சமாதானத்தை குலைக்கும் வகையில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments