Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திஹார் சிறையில் பிறந்தநாள் கொண்டாடப்போகும் ப சிதம்பரம் !

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (09:01 IST)
ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட போகும் ப சிதம்பரம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி தனது 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம் செய்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை காவலுக்கு செய்ய ப.சிதம்பரம் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இதே அறையில் தான் கடந்த ஆண்டு கார்த்திக் சிதம்பரம் ஒரு வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் அடைக்கப்பட்ட 7ஆம் எண் அறையில்  மேற்கத்திய பாணியிலான கழிப்பறை வசதி உண்டு என்பதும் போதிய காவலர்கள் நிறுத்தப்பட்ட இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிதம்பரம் தனது 75 ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று சிறையில் கழிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாட எண்ணிய அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

இந்தியாவுக்கு 50 சதவீத வரி! அமெரிக்காவால் 12 ஆயிரம் கோடி பாதிப்பை சந்திக்கும் திருப்பூர் பிஸினஸ்??

மார்த்தாண்டம் அருகே பற்றி எரியும் கிணறு.. பெட்ரோல் கலந்துவிட்டதா?

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments