Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீட்டிப்பு..நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
ப சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீட்டிப்பு..நீதிமன்றம் உத்தரவு
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (17:22 IST)
ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை சிறப்பு நீதிமன்றம் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் படி, ப சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிபிஐ தரப்பில் ப சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் பின்பு ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நிதிபதி.

இந்நிலையில் சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்ததால் இன்று மதியம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பினர், இன்னும் விசாரணை நடத்த உள்ளதால் காவலை இன்னும் 5 நாள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாஹோ - சினிமா விமர்சனம்