இந்தியா கூட்டணியில் இணையவில்லை.. தனித்து போட்டி.. ஒவைசி அதிரடி முடிவு..!

Mahendran
புதன், 24 செப்டம்பர் 2025 (10:58 IST)
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்  கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் வராததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிகார் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓவைசி இந்தியா கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக, ஆர்ஜேடி கட்சிக்கு பல முறை கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிகாரில் போட்டியிட வெறும் ஆறு தொகுதிகளையும், அமைச்சர் பதவி தேவையில்லை என்றும் கேட்டதாக ஓவைசி கூறியுள்ளார்.
 
இந்நிலையில், நேற்று ஓவைசி பிகாரில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இது, அவரது கட்சி தனித்து போட்டியிடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
 
கடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஓவைசியின் கட்சி தனித்து போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் தனித்து களம் காணும் அவரது முடிவும், அது பிகார் அரசியலில் ஏற்படுத்தும் தாக்கமும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments