Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கி ஊழியரை கற்பழித்த காமுகர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு

Advertiesment
வங்கி ஊழியரை கற்பழித்த காமுகர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு
, வியாழன், 6 டிசம்பர் 2018 (08:05 IST)
கும்பகோணத்தில் வங்கி ஊழியரான ராஜஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணை 4 காமுகர்கள் கூட்டு சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, அவருக்கு கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் வேலை ஒதுக்கப்பட்டது. 
 
இதனால் அவர் கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்து, பின்னர் கும்பகோணத்திற்கு சென்றார். நள்ளிரவு கும்பகோணத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் தான் செல்ல வேண்டிய விடுதியின் பெயரை கூறி அங்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
webdunia
ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அயோக்கியனோ அதிக காசிற்காக ஆசைப்பட்டு, அந்த பெண்ணை ஊர் முழுக்க சுற்றி திரிந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் தன் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கேடுகெட்ட ஆட்டோ டிரைவர் அந்த இளம்பெண்ணை ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளான்.
 
கீழே இறங்கிய அந்த பெண் செய்வதிறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள், அந்த பெண்ணிற்கு உதவுவதாக கூறினர். இதனை நம்பி அந்த பெண் அவர்களுடன் சென்றார். ஆனால் அந்த 2 மனித மிருகங்களும் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர். போதாது அவர்களது 2 நண்பர்களையும் வரவழைத்துள்ளனர் அந்த அயோக்கியர்கள்.
webdunia
பின்னர் அந்த பெண்ணை அவர் கூறிய விடுதிக்கு அழைத்து சென்று விட்டுள்ளனர். சீர்குலைந்துபோன அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில் பணியில் சேர்ந்த அந்த இளம்பெண், வங்கி மேனேஜரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். மிரண்டு போன வங்கி மேனேஜர், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
 
பின்னர் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அந்த 4 அயோக்கியர்களும் கைது செய்யப்பட்டார்கள். இதில் காசுக்காக ஆசைப்பட்டு அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த அந்த கேடுகெட்ட ஆட்டோ டிரைவரை போலீஸ் தேடி வருகின்றனர். வெளியூரிலிருந்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டியது நம் கடமை. அதை விட்டுவிட்டு இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்?
 
இந்த செயலை செய்த மனித மிருகங்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுபிக் கடலில் நிலநடுக்கம் – சுனாமிக்கு வாய்ப்பு!