Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு இளைஞர்களும் 4 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்: பாஜக அமைச்சர்..

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:01 IST)
நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். 
 
நமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாம் முயற்சி செய்யக் கூடாது என்றும் நமது இளைஞர்கள் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் உத்தர பிரதேச மாநில அமைச்சர் ரகுநாத் சிங் பேசியுள்ளார்.
 
உங்களால் அந்த குழந்தைகளை வளர்த்து பராமரிக்க முடியாவிட்டால் எங்களிடம் கொடுங்கள் நாங்கள் அவர்களை வளர்த்து பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த காலங்களில் செய்த தவறுகள் காரணமாக பல ஆண்டுகள் அடிமையாக இந்தியர்கள் இருந்து வருகிறார்கள் என்றும் இனி மேலும் அது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்றும் பாகிஸ்தான் சீனா நாடுகளுக்கு நாம் நல்ல பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் பேசினார். இந்தியாவின் நிறுவப்பட்ட ராமராஜ்யம் ஒருவராலும் நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments