Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரலாகும் முன்னாள் முதல்வரின் புகைப்படம்!

Advertiesment
வைரலாகும் முன்னாள் முதல்வரின் புகைப்படம்!
, வியாழன், 13 அக்டோபர் 2016 (00:40 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சாதாரண இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

 
 
முன்னாள் முதல்வர் என்ற பந்தா இல்லாமல் இரண்டாம் வகுப்பு டெட்டியில் அவர் பயணம் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்ட ஒரு பயணி அவரை செல்போனில் படம் எடுத்தார். அப்போது உம்மன்சாண்டி தனது கையை தலையணை போல் படுத்து உறங்கி கொண்டிருந்தார். தனது செல்போனில் புகைப்படம் எடுத்த சகபயணி, அதை டுவிட்டரில் பதிவிட்டார். அந்த படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
 
உம்மன்சாண்டி கடந்த மே மாதம், கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அவர் முதல்வராக இருந்த போதே பாதுகாவலர்களை எதிர்பார்க்காமல் ரயிலில் சாதாரணமாக பயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் இன்று முறைப்படி தேர்வு!