Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

Advertiesment
பாலியல் வன்கொடுமை

Mahendran

, வெள்ளி, 30 மே 2025 (11:57 IST)
சமீப மாதங்களில், மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் சிறிய நகரங்களில் ஹிந்து பெண்கள் மற்றும் மகளிரை குறிவைத்து அமைக்கப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை குழு வெளிப்பட்டுள்ளது.  இவை “லவ் ஜிஹாத் கும்பல்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள் பெண்ண்களை நண்பர்களாக சந்தித்து, பாலியல் வஞ்சனை செய்து, அவற்றை ஆபாச வீடியோக்களால் மிரட்டி இறுதியில் மத மாற்றம் செய்ய வற்புறுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் 12 பேருக்கு மேல்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
 
ஒரு விவாகரத்து பெற்ற பெண் போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பலிடம் சிக்கினார். அவர் தன் மகனுடன் வாழ்கிறார். அந்த  நபர்  திருமணம் செய்து கொள்வதாக பொய்யாக கூறி, பல முறை பாலியல் வன்முறை நிகழ்த்தி, மத மாற்றம் செய்யவும் வற்புறுத்தினார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
 
அதே போல் இந்துமத கல்லூரி மாணவிகளை இலக்கா கொண்டு அந்த அமைப்பு செயல்பட்டது. இதுகுறித்து இளம்பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் கைதான ஒருவரின் கைப்பேசியில் பல ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் 5 பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
 
இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற நபர்களிடம் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரைத்து உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் , யுபிஐ வெற்றிக்கு பின் டிஜிட்டல் முகவரி திட்டம்.. மத்திய அரசு அசத்தல்..!