Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் 5 புதிய உத்தரவாதங்களை அமல்படுத்த உத்தரவு- முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

sitharamaiya
, சனி, 20 மே 2023 (20:10 IST)
224 சட்டமன்றத் தொகுததிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
 
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மேலிடம் முதல்வராக சித்தராமையாவையும், துணைமுதல்வராக சிவக்குமாரை அறிவித்தது.

அதன்படி, இன்று கர்நாடகாவில் உள்ள பெங்களூரில்  முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணைமுதல்வராக டிகே. சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த  நிகழ்ச்சியில் அம்மாநில  கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி  அவர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம்  செய்து வைத்தார்.

இன்று முதல்வராகப் பதவியேற்ற முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வழங்கிய 5 உத்தரவாதங்களை அமல்படுத்துவதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதன்படி, கிரக ஜோதி எனும் அனைத்து வீடுகளுக்கும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரகலட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்குதல், அன்ன பாக்யா எனும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்குதல், யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதவர்க்கு 2 ஆண்டுகள் அலவன்ஸ் – பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்குவது சக்தி எனப்படும் திட்டத்தின்  கீழ்  கர்நாடக மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம் ஆகிய 5 உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த விடியல் நாட்டில் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்- முதல்வர் முக.ஸ்டாலின்