Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வாக்காளருக்காக 40 கிமீ நடந்தே சென்று வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் அதிகாரிகள்..!

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (13:31 IST)
அருணாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தேர்தல் அதிகாரிகள் 40 கிலோ மீட்டர் நடந்தே சென்று வாக்கு சாவடி அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் அருணாச்சலம் பிரதேசம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. இங்கு சீன எல்லையை ஒட்டிய ஒரு சிற்றூரில் 44 வயது பெண் ஒருவருக்காக வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது

இந்த ஊரில் வேறு சில வாக்காளர்கள் இருந்தாலும் அவர்களது வாக்குகள் பக்கத்து ஊரில் சேர்க்கப்பட்டது. ஆனால் தாயாங் என்ற அந்த பெண், பக்கத்து ஊரில் தனது வாக்கை சேர்க்க மறுத்துவிட்டார். இதனால் அவர் ஒருவருக்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது

சுமார் 40 கிலோ மீட்டர் நடந்தே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாயாங் என்ற அந்த பெண் பகல் ஒரு மணிக்கு வாக்களித்தவுடன் பேட்டி அளித்த போது ’எனது வாக்குரிமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களிக்க வாய்ப்பளித்த தேர்தல் அதிகாரிக்கு நன்றி என்று தெரிவித்தார்

ஒரே ஒரு வாக்காளராக இருந்தாலும் அவருடைய வாக்குரிமைக்கு மதிப்பு கொடுத்து இங்கு வாக்கு சாவடி அமைத்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி.! ராஜ்நாத் சிங் மற்றும் ராகுல் காந்தி இரங்கல்..!!

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments