இன்று மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் மணிப்பூரில் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெறும் நிலையில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி நடந்து வருகிறது.
மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறை நிகழ்ந்து வருவதால் கூடுதல் பாதுகாப்புடன் அங்கு காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் உள் மணிப்பூரின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அவ்வாறாக மொய்ராங் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு துப்பாகியுடன் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த மக்கள் வாக்குச்சாவடியை விட்டு தப்பித்து நாலா திசையிலும் சிதறி ஓடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவைல்லை எனினும் இதனால் அப்பகுதியில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.