இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் நிலையில் மீண்டும் ஆன்லைனில் வழக்கு விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்றும் காணொளி வாயிலாக ஆஜராக அனுமதி கோரினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தெரிவித்துள்ளார்.