Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 4000ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: மத்திய அரசு கவலை..!

இந்தியாவில் 4000ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: மத்திய அரசு கவலை..!
, புதன், 5 ஏப்ரல் 2023 (11:15 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 4000ஐ தாண்டி உள்ள நிலையில் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு 1000, 1500 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து இன்று 4000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4435 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 23 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ.720 அதிகரித்த தங்கம் விலை.. இனி ஏழைகளுக்கு எட்டாக்கனியா?