ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பயணிகளின் உடல்நலனை கருதி ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அதற்காக ரயில் நிலையங்களில் கிளினிக் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல் கட்டமாக கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட 10 ரயில் நிலையங்களில் கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்ல்கு ஒரு ரூபாய் கிளினிக் என பெயரிடப்பட்டுள்ளது.
கிளினிக் செல்லும் பயணிகளிடமிருந்து மருத்துவர் கட்டணமாக ரூ.1 வசூலிக்கப்படும். ரயில் நிலையங்களில் கிளினிக் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.