கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் என்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த ரயில் விபத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் பொதுமக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.
ஒடிசாவின் பார்கார் என்ற பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டதாகவும் அந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிஷ்டவசமாக இந்த விபத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தடம் புரண்ட பெட்டிகளை மீட்க ரயில்வே துறை ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அந்த ரயில் கிளம்பும் என்றும் கூறப்படுகிறது. ஒடிசாவில் கோர விபத்து நடந்த மூன்றே நாட்களில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.