இந்தியா முழுவதும் 5 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆறு ஆக அதிகரித்துள்ளது.
நைஜீரியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முறையில் அவருக்கு குரங்கு அம்மைநோய் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே கேரளாவில் 3 பேர் ஆந்திரா ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது