கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பல பில்லியனர்கள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் உலக டாப் 10 பில்லியர்கள் பட்டியலில் அதானி நுழைந்தார். இந்திய தொழிலதிபரான அதானி தொடர்ந்து முன்னேறி மூன்றாவது இடத்தை அடைந்தார்.
உலக பணக்காரர் பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் எலான் மஸ்க், இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் இருந்து வந்தார்கள். இந்நிலையில் அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சியை கண்டு வருவதால் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோசின் சொத்து மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் தற்போது 155.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ள அதானி, அமேசார் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.