Publish Date: Fri, 24 Dec 2021 (16:52 IST)
Updated Date: Fri, 24 Dec 2021 (16:56 IST)
ஓலா நிறுவனம் 90 ஆயிரம் ஆர்டர்களை வாங்கி குவித்துள்ள நிலையில் அதனை எப்படி டெலிவரி செய்யப்போகிறது என்ற கடும் சவால் அந்நிறுவனத்தின் முன் எழுந்து உள்ளது.
ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்தது என்பதும் இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை ஓலா நிறுவனம் சுமார் 90 ஆயிரம் ஆர்டர்களை பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ஓலா நிறுவனம் நாள் ஒன்றுக்கு 150 மின்சார ஸ்கூட்டர் மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது
இந்த நிலையில் 90 ஆயிரம் ஆர்டர்களை எப்படி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்போகிறது என்பது பெரும் சவாலாக உள்ளது. நாளொன்றுக்கு 150 ஸ்கூட்டர்கள் உற்பத்தி என்றால் ஒரு மாதத்திற்கு 4500 ஸ்கூட்டர்கள் மட்டுமே உற்பத்தி ஆகும். அப்படி என்றால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் டெலிவரி செய்ய கால அவகாசம் எடுத்து கொள்ளும் என கூறப்படுகிறது.