மகாராஷ்டிராவில் பெய்த கனமழையில் விளைப்பொருட்கள் அடித்து செல்வதை காப்பாற்ற முடியாமல் விவசாயி கதறும் வீடியோ பார்ப்பவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி கௌரவ் பன்வார், தான் சாகுபடி செய்த வேர்க்கடலைகளை கொண்டு சென்றபோது கனமழையால் வேர்க்கடலைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அவற்றை கொட்டும் மழையில் காப்பாற்ற அவர் முயற்சிக்கும் வீடியோ பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ வைரலான நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கும் சென்றது. அதை தொடர்ந்து அந்த விவசாயியிடம் ஃபோன் செய்து பேசிய அமைச்சர், அவருக்கு ஆறுதல் சொன்னதோடு இழப்பீட்டிற்கான நிவாரணமும் வழங்குவதாக ஆறுதல் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K