இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில் பின் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும் இரு நாடுகளிடையே முரண்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் உளவு அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்டறியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் ஹரியானாவை சேர்ந்த பெண் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார், அவரைத் தொடர்ந்து உத்தர பிரதேச தொழிலதிபரான ஷாஜாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொழிலதிபரான ஷாஜாத் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்ததுடன், சட்ட விரோதமாக அங்கிருந்து மேக்கப் பொருட்கள், ஜவுளி, அலங்கார பொருட்களை கடத்தி வந்து இந்தியாவில் விற்பனை செய்து வந்துள்ளார். இதுத்தவிர இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்ததும், அவர்கள் பணிக்காக ஆள் சேர்க்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.
அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வந்த உத்தர பிரதேச காவல்துறையினர் முராதாபாத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K