மத்திய பிரதேசத்தில் திவாஸ் மாவட்டத்தில் 185 ஏக்கர் பரப்பளவில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பணத்தை லாலணியில் மறைத்து திருடி சென்ற அதிகாரியை துணை ராணூவத்தினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
திவாஸ் மாவட்டத்தில் உள்ள பணம் அச்சடிக்கும் மையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது ஷூவில் வைத்து ரூ.20,000 திருட முயன்றார். அப்போது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ரூபாய் நோட்டுகளை சரி பார்க்கும் பிரிவில் துணை கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரும் மனோகர் வர்மா என்பது தெரியவந்துள்ளது.
இந்த திருட்டு கடந்த பல வருடங்களாக நடந்து வருவதாக அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. அவர் இதே போல தினமும் பணத்தை திருடி சென்றிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அளுவளகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் மனோகர் வர்மா பணம் திருடிய காட்சிகள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதை வைத்தே அவரை கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மனோகர் வர்மாவின் அலுவலகத்தில் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முறையே ரூ.26,09,000, ரூ.64,50,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மனோகர் வர்மாவிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.