மத்திய பிரதேசத்தில் பிரசவ வலியால் கதறிய பெண்ணை மருத்துவமனை செலியியர்கள் சத்தம் போடக்கூடாது என அடித்த சமபவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் கசிந்துள்ளது.
மத்திய பிரதேச அரசு மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். ஆனால், அங்கு பணிபுரியும் செலிவியர்களோ அந்த பெண்ணை சத்தம் போட கூடாது என தாக்கியுள்ளனர்.
மேலும், உன் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என கூறி, அந்த பெண்ணிற்கு சிகிச்சையளிக்காமல் மருத்துவமனை ஓரமாக படுக்கவைத்துள்ளனர். இதனால், ஒரு கட்டத்தில் வலிதாங்க முடியாமல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த பெண்.
கர்ப்பிணி பெண்ணின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணுக்கு வெட்ட வெளியில் பிரசவம் பார்த்துள்ளனர். அந்த பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கூறிய பின்னும், குழந்தை உயிருடன் பிறந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், அரசு மருத்துவமனை செவிலியர்களின் இந்த கவனக்குறைவு கண்டிக்கதக்கதாக உள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.