Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்: பிரதமர் மோடி உரை

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்: பிரதமர் மோடி உரை
, ஞாயிறு, 29 மார்ச் 2020 (11:39 IST)
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்: பிரதமர் மோடி உரை

இந்தியாவில் 987 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி மன்கி பாத் எனப்படும் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார்.

அதில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த என்  கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை; நாட்டில் உள்ள அனைவரது உடல் நலமே மகிழ்ச்சி தரும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். கட்டுப்பாடுகளை விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே சிலரால் கொரோனா ஆபத்தால் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார்.

2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், நீங்களும் கவனமாக இருங்கள் கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயம் கொள்ள வேண்டாம்.

மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதில் உள்ள  சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை அதனால் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது என தனது உரையில் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் .